ஜெர்மன் அரசாங்கம் கொரோனா காலகட்டத்தை முன்னிட்டு தனிநபர்கள் மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு உதவும் நோக்கில் சுமார் 30 பில்லியன் யூரோக்களை வரி நிவாரண நடவடிக்கைகளுக்கு ஒதுக்கியுள்ளது.
ஜெர்மன் நாட்டின் நிதி அமைச்சர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா காலகட்டத்தை முன்னிட்டு தனிநபர்கள் மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு உதவும் விதமாக ஜெர்மன் அரசாங்கம் சுமார் 30 பில்லியன் யூரோக்களை வரி நிவாரண நடவடிக்கைகளுக்கு ஒதுக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வரி நிவாரணம் அடுத்தாண்டின் வரைவு பட்ஜெட்டில் சேர்த்துக் கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமின்றி இந்த வரி நிவாரணத்திலிருந்து ஓய்வூதிய காப்பீட்டின் பங்களிப்பு முற்றிலுமாக கழிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.