டெல்லியில் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக மாணவர்கள் நடாத்திய போராட்டம் குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தியான கருத்தை தெரிவித்துள்ளது.
டெல்லியில் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக JNU பல்கலைக்கழக மாணவர்கள், jmu பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பல்வேறு மாணவ அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் திடீரென வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் பயங்கரமாக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இது மனித உரிமை மீறல் என்று கூறி டெல்லி காவல்துறை உயர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் விடிய விடிய போராட்டம் நடத்தினர்.
மேலும் டெல்லி உச்சநீதிமன்றமும் தாமாக முன்வந்து இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் போராட்டம் குறித்தும் காவல்துறையினர் நடத்திய தாக்குதல் குறித்தும் இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பாக விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதுகுறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தனது அதிருப்தி கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அதில் வன்முறை நடந்த இடங்களில் பதிவு செய்யப்பட்ட போராட்ட வீடியோக்களை நான் பார்த்தேன். பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்திய அரசியலமைப்பு சாசனம் மாணவர்களாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி அமைதியாக போராட்டங்கள் நடத்த தான் அனுமதி வழங்கியுள்ளதே தவிர மாறாக பொது சொத்துக்களை சேதப்படுத்தவோ பேருந்துகளை எரிக்கவோ அனுமதி வழங்கவில்லை. இந்த வழக்கை நான் விசாரிக்கிறேன். ஆனால் அதற்கு முன்பாக வன்முறை ரீதியாக நடைபெறும் அனைத்து போராட்டங்களும் நிறுத்தப்பட வேண்டும். அப்பொழுது தான் இந்த விசாரணை தொடங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.