Categories
உலக செய்திகள்

கொடூரம்…! பெண்ணை எரித்துக் கொன்ற ஊழியர்கள்…. வைரலான புகைப்படம்…. உண்மை என்னன்னு தெரியுமா..? இதோ… வெளியான தகவல்….!!

பாகிஸ்தானில் எரித்து கொல்லப்பட்ட இலங்கை பெண் சம்பவத்தில் வைரலான புகைப்படம் தொடர்புடைய உண்மை தன்மை தற்போது தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாநிலத்திலிருக்கும் தொழிற்சாலை ஒன்றில் 40 வயதாகும் பிரியந்தா என்ற இலங்கை பெண்மணி ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அலுவலக சுவருக்கு அருகேயிருந்த மதப் பிரச்சார சுவரொட்டியை கிழித்து குப்பையில் போட்டுள்ளார். இதனைக் கண்டு கோபமுற்ற சக ஊழியர்கள் அவரை தீவைத்து எரித்துக் கொன்றுள்ளார்கள்.

அப்போது பிரியந்தாவின் சடலத்திற்கு அருகே அவருடைய தாயார் நின்று அழுவது போன்ற புகைப்படம் வைரலாகியுள்ளது. இந்நிலையில் அந்த வைரலான புகைப்படத்தின் உண்மை தன்மை தற்போது தெரியவந்துள்ளது. அதாவது அந்த புகைப்படத்தில் நிற்கும் பெண்மணி பிரியந்தாவின் தாயார் இல்லை என்று தெரியவந்துள்ளது.

அதோடு மட்டுமின்றி அந்த புகைப்படம் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது எடுக்கப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அந்த புகைப்படத்தில் நிற்கும் பெண்மணியான அப்சன் அரசு அதிகாரிகளின் மீது தொடர்ந்து இணையத்தில் குற்றச்சாட்டை முன் வைப்பவர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

Categories

Tech |