இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள புதிய படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தை தொடர்ந்து துருவ் விக்ரம் நடிக்கும் ஒரு படம் மற்றும் தனுஷ் நடிக்கும் ஒரு படம் ஆகிய இரு படங்களை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. முதலில் இந்த இரண்டு படங்கள் மட்டும்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்ததாகவும், தற்போது உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க விரும்புவதாகவும் அதனால் உதயநிதி ஸ்டாலினை வைத்து ஒரு படம் மாரி செல்வராஜ் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் இந்த படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் முழுநேர அரசியல்வாதியாக மாறி விடுவார் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பார் எனவும், மேலும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இந்தப்படத்திற்கு இசையமைப்பார் எனவும் கூறப்படுகிறது.