Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் சூதாட்டத்தால் வந்த வினை…. ஈபிஎஸ் கண்டனம்….!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்குடி பகுதியில் வங்கி அதிகாரி மணிகண்டன் வசித்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருந்தனர். இதனிடையில் மணிகண்டன் தீராத கடன் தொல்லையால் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஆன்லைனில் விளையாட்டில் பணத்தை இழந்த மணிகண்டன் பலரிடம் கடன் வாங்கியதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஈபிஎஸ் கூறியதாவது, ஆன்லைன் சூதாட்டத்தால் வங்கி ஊழியர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டிருப்பது திமுக அரசு மீது கோபத்தை ஏற்படுத்துகிறது. சூதாட்டத்தை தடை செய்ய சட்டம் இயற்ற தமிழக அரசு மறுப்பது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |