Categories
உலக செய்திகள்

அடப்பாவமே…! பாரம்பரியம்னு சொல்லி இப்படியா தீ வைக்கணும்…. எச்சரிக்கையை மீறிய பொதுமக்கள்…. என்ன செய்யப்போகிறது அரசு….?

பிரான்சில் அரசின் எச்சரிக்கையை மீறி பொதுமக்கள் 2022 ஆம் ஆண்டின் புத்தாண்டை பாரம்பரிய முறைப்படி கொண்டாடும் நோக்கில் சுமார் 874 கார்களை தீவைத்து எரித்துள்ளார்.

பிரான்சிலுள்ள Strasbourg பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றவர்களை விட முக்கியமாக ஆண்டுதோறும் புதுவருடப் பிறப்பை பாரம்பரிய முறைப்படி கொண்டாடும் நோக்கில் கார்களை தீவைத்து எரித்து வருகிறார்கள்.

இந்த மோசமான செயலை தடுக்க பிரான்ஸ் அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளது. இந்நிலையில் பிரான்ஸில் கொரோனா காரணமாக காரை தீ வைத்து எரித்தல் உட்பட பல புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும் பிரான்ஸ் நாட்டு பொதுமக்கள் அரசாங்கத்தின் எச்சரிக்கையை மீறி சுமார் 874 கார்களை தீ வைத்து கொளுத்தியுள்ளார்கள்.

Categories

Tech |