புகழின் உச்சியில் இருக்கும் இசை புயல் ஏஆர் ரஹ்மானின் மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது.
தன் இசையால் உலக அளவில் கோடானகோடி ரசிகர்களை கட்டிப்போட்ட இசைப்புயல் ஏ ஆர் ரகுமான், இசைத் துறையில் பல சாதனைகளை படைத்திருக்கிறார். இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று தமிழ் திரையுலகையே பெருமைப்படுத்தினார். இன்று, உலகளவில் புகழின் உச்சியில் இருக்கும் அவருக்கு கதிஜா ரஹ்மான், ரஹீமா ரஹ்மான் மற்றும் அமீன் என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இதில் மூத்த மகள் கதீஜாவிற்கு, ரியாஸ்தீன் ரியான் என்ற சவுண்ட் இன்ஜினியருடன் திருமண நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இதனை, கதீஜா ரஹ்மான், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அதில், என் பிறந்த நாளான டிசம்பர் 29ம் தேதியன்று எனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக, குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்றனர் என்று தெரிவித்திருக்கிறார்.
எனவே, ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு, இன்று புகழின் உச்சத்தில் இருக்கும் ஏஆர் ரஹ்மானுக்கு மருமகனாக வருபவர் அதிர்ஷ்டசாலி என்று கூறிவருகின்றனர்.