கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம், பீரங்கனஹள்ளி கிராமத்தில் கங்கம்மா என்ற ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து சித்தரன்னா கேசரிபாத் உள்ளிட்ட உள்ளூர் உணவுகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. அவற்றை ஏராளமான பக்தர்கள் வாங்கி சாப்பிட்டனர்.
அதில் 50 பேருக்கு வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பிரசாத உணவுகளின் மாதிரிகளை சேகரித்து சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.