Categories
தேசிய செய்திகள்

“நாடே கொந்தளிப்பு”…. ஜிம்முக்குள் மூவரின் கொடூர செயல்…. பெண்ணுக்கு நடந்த துயரம்…. பரபரப்பு….!!!!

டெல்லியின் புத்த விஹார் பகுதியில் உள்ள ஜிம்மில் 35 வயதான தொழிலதிபர் ஒருவர் தினசரி பயிற்சியில் ஈடுபடுவார். அவரோடு அவரின் தொழிற்சாலையில் பணிபுரியும் 21 வயதான பெண்ணும் அங்கு வந்து உடற்பயிற்சி செய்வது வழக்கம். அதன்படி கடந்த வியாழக்கிழமை உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அந்த பெண்ணை அவரின் முதலாளி ஜிம்மை சுத்தம் செய்யுமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த பெண் ஜிம்மை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முதலாளியும் ஜிம்முக்கு சொந்தக்காரரும், பயிற்சிக்கு வந்த 17 வயதான வாலிபரும் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தனர் .

அந்த பெண் அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்றபோது அவர்கள் ஜிம் கதவை பூட்டிவிட்டு பெண்ணை மிரட்டிவிட்டு தப்பியோடியனர். அதன்பின் அந்த பெண் அங்கிருந்து வெளியே வந்து அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த 3 பேர் மீதும் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து  அந்த 3 பேரையும் தேடி வருகின்றனர்

Categories

Tech |