ஸ்கூட்டர் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளர் வீதியில் சங்கர் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் நந்தினி தனது தாயாருடன் ஸ்கூட்டரில் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த அரசு பேருந்து நந்தினியின் ஸ்கூட்டர் மீது பலமாக மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த நந்தினியின் மீது பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் அவரது தாய் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பிவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த நந்தினியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே நந்தினி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அரசு பேருந்து ஓட்டுநராகன செந்தில்குமார் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.