Categories
சினிமா தமிழ் சினிமா

செம…… கலக்கலாக தொடங்கிய தனுஷின் புதிய படம்…… ட்ரெண்டாகும் புகைப்படம்…..!!!

‘வாத்தி’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் ”மாறன்”. இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து, இவர் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் ”வாத்தி” என பெயரிடப்பட்ட டைட்டில் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

தனுஷின் 'வாத்தி' திரைப்படத்தின் படப்பிடிப்பு துவக்கம்! - Film Crazy Media

இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Categories

Tech |