மும்பையில் நேற்று ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தலை வைத்து படுத்திருந்தார். ரயில் அருகில் வந்து விட்ட நிலையில் ஒருவர் படுத்து இருப்பதை அறிந்த ரயில் ஓட்டுனர் சட்டென்று பிரேக்கை அழுத்த ரயிலை நிறுத்தி விட்டார். அதன்பிறகு ரயில்வே போலீசார் ஓடிவந்து படுத்திருந்த நபரை காப்பாற்றினார்.
ஆனால் அவர் தற்கொலை செய்வதற்காக படுத்திருந்தாரா அல்லது குடி போதையில் படுத்திருந்தாரா என்று தெரியவில்லை. இந்த வீடியோவை பகிர்ந்து ரயில்வே அமைச்சகம் ஓட்டுநரை பாராட்டி, மக்களின் உயிர் விலை மதிப்பற்றது என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.
मोटरमैन द्वारा किया गया सराहनीय कार्य : मुंबई के शिवड़ी स्टेशन पर मोटरमैन ने देखा कि एक व्यक्ति ट्रैक पर लेटा है उन्होंने तत्परता एवं सूझबूझ से इमरजेंसी ब्रेक लगाकर व्यक्ति की जान बचाई।
आपकी जान कीमती है, घर पर कोई आपका इंतजार कर रहा है। pic.twitter.com/OcgE6masLl
— Ministry of Railways (@RailMinIndia) January 2, 2022