தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி,வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மற்றும் உப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை முதல் நியாயவிலை கடைகளில் 21 பொருள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனை மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதனால் தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக்கடைகள் பொங்கல் பரிசு தொகுப்பினை மக்களுக்கு விநியோகம் செய்ய தயாராகி வருகின்றனர்.