குடும்ப பிரச்சனையில் போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளியில் உள்ள 7-ம் நிலை பாட்டாலியனில் பழனிச்சாமி என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும், ரிஷ்வந்த், கௌசிக் என்ற 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின் பழனி சாப்பிட்டு விட்டு இரவு தூங்க சென்றுள்ளார்.
இதனை எடுத்து மறுநாள் காலை எழுந்து பார்த்த திவ்யா தனது கணவர் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனிசாமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.