மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஊரக்கரை கிராமத்தில் லாரி கிளீனரான பிரசாந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் துறையூர் நோக்கி வேகமாக சென்ற பேருந்து பிரசாந்தின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரசாந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரசாந்தின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அரசு பேருந்தின் ஓட்டுநரான ரங்கசாமி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.