‘சிட்டிசன்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”வலிமை”. இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து, இவர் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”சிட்டிசன்”. இந்த திரைப்படத்தில் வசுந்தரா தாஸ், மீனா, நக்மா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்நிலையில், இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் உலக நாயகன் கமல்ஹாசன் என தகவல் வெளியாகியுள்ளது. அப்போது அவர் கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால் இந்த படத்தில் அஜித் நடித்ததாக கூறப்படுகிறது.