மேகலாய ஆளுநர் சத்தியபால் மாலிக் சமீபத்தில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது தனக்கு ஏற்பட்ட அதிருப்தி தொடர்பாக அவர் தற்போது பேசியிருக்கிறார். வெறும் 5 நிமிடத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு குறித்து ஹரியானாவில் நடந்த விழாவில் பேசிய சத்தியபால் மாலிக், பிரதமர் மோடி மிகவும் திமிர் பிடித்தவர் ஆவார். நான் அவரிடம் 500 விவசாயிகள் இறந்துள்ளனர் என்று கூறினேன்.
அதற்கு பதில் அளித்த மோடி அவர்கள் அனைவரும் எனக்காகவா இறந்தார்கள்?’ என்றார். அப்போது நான் நீங்கள் தான் இந்தியாவின் பிரதமர் என்று கூறினேன். முடிவில் நான் பிரதமரிடம் இந்த விவகாரம் குறித்து வாக்குவாதம் செய்தேன். அதன்பின்னர் அவர் என்னிடம் அமித்ஷாவை சந்திக்குமாறு கூறினார். நான் அமித்ஷாவை சந்தித்தபோது, அவர் ஏதோ பேசிவிட்டார் விடுங்கள். ஆகவே என்னை சந்தியுங்கள் என அமித்ஷா கூறியதாக சத்தியபால் மாலிக் தெரிவித்துள்ளார்.