பெண் குழந்தை நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அன்னூரில் அருள் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிறந்து 7 மாதமே ஆன பரணிகா ஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தையை பிரகாஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அங்கு மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து பார்த்த போது நிமோனியா காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.