Categories
சென்னை தேசிய செய்திகள்

லயோலா கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்….. “வன்முறை வேண்டாம்” பேச்சு வார்த்தையில் காவல்துறை….!!

குடியுரிமை  திருத்த மசோதாவிற்கு எதிராக சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லியில் ஜாமியா JNU உள்ளிட்ட மத்திய பல்கலைக்கழகங்கள் குடி உரிமை மசோதா திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய பொழுது காவல்துறை அவர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியதை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு மாணவர் அமைப்புகளும் கல்லூரி மாணவர்களும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து தமிழகத்திலும் இதற்கான போராட்டங்கள் வலுப்பெற்று உள்ள நிலையில் கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு பின் கைது செய்யப்பட்டனர்.

இவர்களைத் தொடர்ந்து தற்போது சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் குடியுரிமை திருத்த மசோதா சட்டத்திற்கு எதிராகவும், காவல்துறை மாணவர்களை தாக்கியதை கொடூரமாக தாக்கியதை கண்டித்தும் லயோலா கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து போராட்டத்தை உடனடியாக கலைக்க கோரி காவல் துறையினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் தொடர்ந்து வன்முறை நடந்து வருவதால் தமிழகத்தில் அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போராட்டத்தை தற்போது கலைக்குமாறு காவல்துறையினர் மாணவர்களிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

Categories

Tech |