செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, பாராளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் இருதயம் போன்றதாகும். அந்த இதயத்துடிப்பு தான் பாராளுமன்றத்திலே மக்களுடைய அபிப்பிராயத்தை தெரிவிப்பதாகும். பண்டித ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்தபோது ஒரு நாள் கூட அவர் பாராளுமன்றத்திற்கு வராமல் இருந்தது கிடையாது. அனைத்து வாதங்களிலும் அவர் பங்கேற்பார். ஆனால் ஜனநாயகத்தைப் பற்றி வாய்கிழியப் பேசுகிற பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாராளுமன்றத்திற்கு வருவதே கிடையாது.
பாராளுமன்ற கட்டிடத்திற்கு வந்தாலும் சரி, அவருடைய இருக்கைக்கு வருவது கிடையாது, பாராளுமன்றத்தை முழுமையாக புறக்கணிக்கிறார். அதேநேரத்தில் ஜனநாயகத்தைப் பற்றி பேசுகிற அதேவேளையில்…. ஜனநாயகத்தை நசுக்குவதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் பிரதமர் செய்து வருகிறார், அமித்ஷா செய்து வருகிறார். இங்கே நீட்தேர்வு விஷயமாக நானும் கையெழுத்திட்டு இருந்தேன்.
நம்மளுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்க முடியாமல் ஜனாதிபதி அலுவலகத்திலே கொடுத்துவிட்டு அதன் பின்பு அமித்ஷாவை சந்திக்க முயன்றார்கள். அமித்ஷா நேரமே ஒதுக்கவில்லை. ஆகவே மொத்தத்தில் தமிழ்நாட்டுக்கு என்ன கேடு செய்ய முடியுமோ அதை மத்திய அரசு ஒன்றிய அரசு செய்து வருகிறது.
இது தமிழ்நாட்டுக்கு எவ்வளவு பாதகங்களை ஏற்படுத்த முடியுமோ ஒவ்வொரு பிரச்சனையிலும் அவர்கள் செய்து வருகிறார்கள். அது மீனவர்கள் பிரச்சினையாக இருக்கட்டும், அல்லது ஜவுளித்துறை ஆக இருக்கட்டும் எல்லாத்துறையிலும் தமிழ்நாட்டுக்கு வஞ்சகமும், கேடும் ஒன்றிய அரசு மத்திய அரசு செய்து வருகிறது.
இந்த நிலை மாறவேண்டும், தமிழ்நாட்டிலேயே அவர்கள்…. மயிலே மயிலே இறகு போடு என்றால் போடாது என்று பழமொழி உண்டு. விவசாயிகள் போராட்டத்தில் ஏறத்தாழ ஓராண்டு காலம் போராடி 700 உயிர்களை பலிகொடுத்த பிறகுவேறு வழி இன்றி,விவசாயிகள் போராட்டத்திற்கு தலைவணங்கி கொண்டுவந்த சட்டங்களை திரும்பப் பெற்றுக் கொண்டது.எனவே இப்படிப்பட்ட நிலையில் தான் தமிழ்நாட்டினுடைய அரசியலில் மத்திய அரசினுடைய ஓரவஞ்சக போக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.