3 ஆவது முறையாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இலங்கையில் பிறந்த செய்தி வாசிப்பாளர் ஒருவர் கண்ணீர் மல்க தன்னுடைய திருமண உறவு குறித்து பேசியுள்ளார்.
இலங்கையரான செய்தி வாசிக்கும் சார்ஜ் அழகையா தன்னுடைய சிறுவயதிலேயே இங்கிலாந்து நாட்டிற்கு வந்துள்ளார். அதன்பின்பு சார்ஜ் கல்லூரி பயிலும் போது frances என்ற பெண்ணிடம் பழகி அவரையே திருமணம் செய்துள்ளார்.
இவர்களுடைய திருமணத்தின் விளைவாக இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளார்கள். இப்படியாக சார்ஜின் வாழ்க்கை சென்று கொண்டிருக்கும்போது கடந்த 2014 ஆம் ஆண்டு அவருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்துள்ளது.
அதாவது சார்ஜ் அழகையா குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதன்பின்பு தீவிர சிகிச்சையின் மூலம் குணமடைந்த குடல் புற்றுநோய் மீண்டும் கடந்த 2017 ஆம் ஆண்டு சார்ஜை தாக்கியுள்ளது.
அதிலிருந்தும் மீண்ட சார்ஜை குடல் புற்று நோய் கடந்த அக்டோபர் மாதமும் தாக்கியுள்ளது. இந்நிலையில் சார்ஜ் புற்றுநோய்க்கு மத்தியில் தன்னுடைய திருமண உறவு எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதையடுத்து தன்னுடைய மனைவியுடனான உறவு மேலும் அதிகரித்ததாக தெரிவித்துள்ளார்.