ரஜினி கட்சி ஆரம்பிப்பது கடினம்தான் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் விரைவில் கட்சி ஆரம்பிப்பதாக சொன்னதையடுத்து அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். ரஜினி அவ்வப்போது அரசியல் சமூகம் குறித்து கருத்துகளையும் தெரிவித்து வருகின்றார். இந்த நிலையில் சென்னையில் அமைச்சர் அதிமுகவின் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், ரஜினி கட்சி ஆரம்பிப்பது கடினம்தான் என்றார்.
மேலும் அவரது நடவடிக்கை சந்தேகமாகவே உள்ளது. தமிழகத்தில் அதிமுகவை மீறிய சக்தி எதுவுமில்லை. திமுக கார்ப்பரேட் நிறுவனம் போல செயல்படுகிறது. மக்கள் நாடித்துடிப்பை அறிந்தவரே உண்மையான தலைவர். கட்சி ரீதியாக மோதினாலும் தனிப்பட்ட ரீதியில் பத்திரிகையில் எழுதினாலும் நாங்கள் மோதுவோம் என்று தெரிவித்தார்.