தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு பெற்ற பின் ஓய்வூதியம் அளிக்கப்பட்டு வந்தது. இப்பணி ஓய்வு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு வழங்கப்படுகிறது. அந்த அடிப்படையில் தற்போது பணி ஓய்வு பெறும் வயதானது 60 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்பட்ட சில நிதி சிக்கல் காரணமாக பழைய ஓய்வூதிய முறை ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய முறை கொண்டு வரப்பட்டது. அதாவது பழைய ஓய்வூதிய முறையில் ஓய்வு பெறக்கூடிய அரசு ஊழியருக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டது.
அந்த அடிப்படையில் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு அவர் கடைசி மாதம் வாங்கும் சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை மாதந்தோறும் ஓய்வூதியமாக வழங்கப்படும். அவர் உயிரிழந்த பின் அவரது மனைவிக்கு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். இந்த ஓய்வூதிய திட்டத்தை கருத்தில் கொண்டு ஏராளமானவர்கள் அரசு வேலைகளை தேர்வு செய்து வருகின்றனர். ஆனால் அவ்வாறு ஓய்வூதியம் வழங்குவதில் அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அந்த ஓய்வூதிய முறையை ரத்து செய்து அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதனை தொடர்ந்து புதிய ஓய்வூதிய திட்டமாக மாத ஓய்வூதியம் வழங்காமல் பணி ஓய்வு பெறும்போது ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாக வழங்கும் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஓய்வூதிய திட்டத்தினை அரசு ஊழியர்கள் எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருமாறு கோரிக்கை வைத்துள்ளார். மேலும் கடந்த 2 வருடங்களாக அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைத்துள்ள ஈட்டிய விடுப்பினை சரண்டர் செய்து பணபலன் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்பின் வருவாய் அலுவலர்களுக்கு முன்களப் பணியாளர்கள் என்ற முறையில் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.