Categories
உலக செய்திகள்

30 வருஷத்துக்கு பிறகு…. “அம்மாவை” சந்தித்த முதல் தருணம் எப்படி இருந்தது தெரியுமா…? ஞாபக சக்தியால் ஒன்றான குடும்பம்…!!

சீனாவில் மர்மநபரால் 4 வயதில் கடத்தப்பட்ட நபரொருவர் தனது நினைவாற்றலின் மூலம் சொந்த குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவிலுள்ள yunnan பகுதியில் வசித்து வந்த பெண்மணி ஒருவர் தன்னுடைய 4 வயது மகனான லீயுடன் லேன்கோ என்ற இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது அந்த 4 வயது சிறுவனை மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளார்கள்.

அந்த சிறுவனுக்கு தற்போது 30 வயதாகின்ற நிலையில் அவர் தனது நினைவாற்றலை பயன்படுத்தி சொந்த ஊரை வரைபடமாக வரைந்து அதனை காவல்துறை அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார். அதனை வைத்து விசாரித்த போலீஸ் ஒருவழியாக லீயின் சொந்த குடும்பத்தை கண்டறிந்துள்ளார்கள்.

அதன்பின்பு டி.என்.ஏ பரிசோதனையின் முடிவில் காவல்துறை அதிகாரிகள் லீ யையும், அவரது தாயையும் ஒன்றாக சேர்த்து வைத்துள்ளார்கள். இதுகுறித்து லீ கூறியதாவது, 30 வருடத்திற்குப் பின் தனது தாயை சந்தித்து பேசியது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |