பின்னர் காசாளர் அந்த இளைஞர்களிடம் பணம் கேட்க அந்த மூன்று இளைஞர்களும் பண கொடுக்க மறுத்ததோடு அவரையும் மிரட்டியஉள்ளனர் , அது மட்டும் இல்லாமல் தங்களுக்கு பணம் தரவேண்டும் என்றும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அதில் இரு இளைஞர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை மது பான விடுதிமீது வீசினர்
இதனால் மதுபான பாட்டில்கள் மற்றும் கடைகள் சேதமடைந்தது .இச்சம்பவத்தில் இரண்டு ஊழியர்கள் காயமடைந்தனர். அதன்பின் மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து காசாளர் திருபுவனை போலீஸாரிடம் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து போலீஸார் அந்த மூன்று இளைஞர்களும் வெடி குண்டுவீசும் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் தப்பிஓடிய மூவரையும் தேடிவருகின்றனர்.
இவர்கள் யார் ,இவர்களுக்கு வேறு ஏதேனும் குற்றச்சம்பவத்தில் தொடர்புஉள்ளதா ? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.