தெலுங்கில் முதன்முறையாக கால் பதிக்கும் சிவகார்த்திகேயன் என்னுடைய அன்பான நண்பன் என்று அப்படத்தை இசையமைக்கும் தமன் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் கதாநாயகனான சிவகார்த்திகேயன் தன்னுடைய 20-வது படமான சிங்கம் பாதையில் நடிப்பதற்கு திட்டமிட்டிருந்துள்ளார். ஆனால் அவர் அதிரடியாக திட்டத்தை மாற்றி தெலுங்கில் முதன்முறையாக கால் பதிப்பதற்கு முடிவு செய்துள்ளார்.
அதன்படி சிவகார்த்திகேயன் தெலுங்கு திரையுலகில் அனுதீப் இயக்கத்தில் முதன்முறையாக படம் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரிது வர்மா இணையவுள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தினை இசை அமைக்கும் தமன் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது சிவகார்த்திகேயன் தன்னுடைய அன்பான நண்பன் என்று தெரிவித்துள்ளார்.
அதோடு மட்டுமின்றி நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து கிரிக்கெட் விளையாடியிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.