Categories
உலக செய்திகள்

“இந்த நாடுகளுக்கு செல்லாதீர்கள்!”…. மக்களை வலியுறுத்தும் குவைத் அரசு….!!

குவைத் அரசு ஒமிக்ரான் தொற்று அதிகமாக பரவி வரும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு தங்கள் மக்களை வலியுறுத்தியிருக்கிறது.

குவைத் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை மக்கள் தள்ளிவைக்க வேண்டும். இதில் குறிப்பாக இத்தாலி, பிரிட்டன், ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது வரை இல்லாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் வைத்து, ஏற்கனவே இந்த நாடுகளில் இருக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று கூறியிருக்கிறது. குவைத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவாகத்தான் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |