Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா! டிசம்பர் மாதத்தில் FASTag வசூல் 3679 கோடி…. போக்குவரத்து அமைச்சகம் தகவல்….!!!!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மட்டும் 48 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இவற்றை சராசரியாக நாள் ஒன்றுக்கு 1 கோடியே 40 லட்சம் வாகனங்கள் கடக்கின்றன. அனைத்து வகையான கார்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து வாகனங்களுக்கு சுங்ககட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்கச்சாவடிகளில் ஏற்படும் வாகன நெரிசல், காலதாமதத்தால் ஊழியர்களுடன் ஏற்படும் வாக்குவாதங்கள், கைகலப்புகள், வன்முறை சம்பவங்களை தவிர்க்கும் வகையில் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி முதல் ரொக்கமாக பணம் வசூலிக்கும் முறை கைவிடப்பட்டு, FASTag எனப்படும் மின்னணு முறையில் சுங்க கட்டணம் செலுத்தும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.

இந்த நிலையில் நாடு முழுவதும் டிசம்பர் மாதத்தில் FASTag மூலம் 3,679 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது 2001 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 502 கோடி அதிகமாகும். இந்தியாவில் நாளொன்றுக்கு FASTag மூலம் 119 கோடி ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெற்ற நிலையில் சுங்க கட்டணம் வசூல் அதிகரித்துள்ளது.

Categories

Tech |