Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விவேகானந்தா சர்வீஸ் மிஷன் சார்பில்….. நிவாரண உதவிகள்…. மகிழ்ச்சியடைந்த விவசாயிகள்….!!

விவேகானந்தா சர்வீஸ் மிஷன் சார்பில் விவசாயிகளுக்கு நிவாரண உதவி மற்றும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் நயினார் அடுத்துள்ள ராதாபுளி பஞ்சாயத்து கோபாலபட்டினம் கிராமத்தில் விவேகானந்தா சர்வீஸ் மிஷன் சார்பில் விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. ராதாபுளி நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வரப்பு கட்டுதல், மரக்கன்றுகள் வழங்குதல், சொட்டுநீர்ப்பாசனம், பண்ணைகுட்டை அமைத்தல், கோடைகால உழவு, மண் பரிசோதனை, மண்புழு உரம் தயாரிப்பு, பசுந்தாள் உரங்கள் ஆகியவற்றுக்கு திட்டப்பணிகள் மற்றும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு நபார்டு வங்கியின் மண்டல பொது துணை மேலாளர் உஷா தலைமை தாங்கியுள்ளார். இதனை அடுத்து ராதாபுளி ஊராட்சிமன்ற தலைவர் முருகன், விவேகானந்தர் சர்வீஸ் மிஷின் இயக்குனர் பழனிவேல், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் அருண்குமார், மண்டல மேலாளர் கண்ணன், வேளாண்மை துணை இயக்குனர் பானு பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Categories

Tech |