Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தான் 2-வது பரிசு…. புத்தாண்டில் பிறந்த குழந்தைகள்…. மருத்துவரின் தகவல்….!!

புத்தாண்டு தினம் அன்று 19 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் பிறந்திருப்பதாக டாக்டர் குமாரவேல் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் புத்தாண்டு நாளன்று 19 குழந்தைகள் பிறந்துள்ளது. அதில் 13 பெண் குழந்தைகள் மற்றும் ஆறு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. இந்நிலையில் இது பற்றி மருத்துவ அலுவலர் டாக்டர் குமாரவேல் கூறியதாவது, இம்மாவட்டத்தின் அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டு மட்டும் 6,412 குழந்தைகள் பிறந்துள்ளது. அதன்பின் அரசு மருத்துவமனைகளில் நடந்த மகப்பெரு சிகிச்சையில் இம்மாவட்டத்தின் மருத்துவமனை முதலிடம் பெற்றிருக்கிறது.

இதனை அடுத்து இங்கே ஒவ்வொரு மாதமும் 600 குழந்தைகள் வர பிறக்கின்றது. பின்னர் இதில் ஆங்கில புத்தாண்டு நாளன்று 19 குழந்தைகள் பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலேயே தாலுகா அளவிலான மருத்துவமனைகளில் சிறந்த மருத்துவமனையாக இம்மாவட்டத்தில் இருக்கும் அரசு மருத்துவமனை 2-வது பரிசு பெற்று இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |