Categories
மாநில செய்திகள்

சென்னையில் மீண்டும் உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு…. 2 பேர் மரணம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வந்தது. தற்போது உருமாறிய வைரஸ் வேகமாக பரவி வருவதால், தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் சென்னை மாநகராட்சி சில கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. குறிப்பாக மக்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இன்று முதல் மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் மேலும் 876 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சென்னையில் கொரோனாவுக்கு 4,259 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தமிழகத்தில் 1,728 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பு 1,594 ஆக இருந்த நிலையில், 1,728 ஆக அதிகரித்துள்ளது. மொத்த எண்ணிக்கை 27,52,856 ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |