Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“உங்களுக்கும் உண்டு” கட்டாயம் போட வேண்டும்…. ஆட்சியரின் தகவல்….!!

15 வயது முதல் 18 வயது வரை இருக்கும் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 15 வயது முதல் 18 வயது வரை இருக்கும் நபர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளில் வைத்து தடுப்பூசி செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. இதில் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி மட்டுமே போடப்படும்.

இது பற்றி இந்த வயதிற்குட்பட்டவர்கள் COWIN20 PORTAL மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் இல்லையென்றால் தங்கள் கல்வி நிறுவனங்களில் ஏற்பாடு செய்திருக்கும் தடுப்பூசி மையங்களில் நேரடியாகவும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |