Categories
அரசியல்

“எங்கள பலவீனமாக்க நினைக்காதீங்க…. சதி வேலைய தவுடுபுடியாக்குவோம்”…. ஹர்சிம்ரத் ஆவேசம்….!!!!

அகாலிதளக் கட்சியின் தலைவரான ஹர்சிம்ரத் கௌர் பாதல், எங்களை பலவீனமாக்க சதி வேலைகள் நடக்கிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

பஞ்சாப்பில் நடைபெற்ற பெண்கள் கூட்டத்தில் பங்கேற்ற ஹர்சிம்ரத் பேசியதாவது, பஞ்சாப் மாநில மக்களின் நம்பிக்கை என் கட்சிக்கு மீண்டும் கிடைக்கும். எங்கள் கட்சியை பலவீனமாக்குவதற்கு சதி வேலைகள் நடக்கிறது. அதனை வென்று விடுவோம். இவ்வாறான  சதிவேலைகள் எங்களுக்கு புதிது இல்லை.

எனினும் அதனை எதிர்கொண்டு வெல்வோம். பெண்கள் சக்திக்கு முன் எதுவும் நிற்க முடியாது என்று கூறியிருக்கிறார். கட்டாயமாக அகாலிதளம்-பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வெற்றியடையும். பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த வருடம் தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக ஆம் ஆத்மி கட்சி ஒரு பக்கமும், காங்கிரஸ் மற்றொரு பக்கமும் மோதிக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையில், பாஜக கடுமையான போட்டியை தர முயன்று வருகிறது. எனினும் அகாலிதளம் கட்சி, முன்பிருந்த பலமின்றி பலவீனமாக உள்ளது. அகாலி தள கட்சியின், தலைவரான ஹர்சிம்ரத், தனியாக நின்று, அக்கட்சியின் ஆதரவை பெருக்கி வருகிறார்.

Categories

Tech |