நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மேற்குவங்கத்திலும், பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அவை, இரவு 10 முதல் அதிகாலை 5 மணி வரை மக்கள் நடமாட்டத்திற்கும், ஒரே இடத்தில் கூடுவதற்கும் வாகனங்களில் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வரும் 5-ஆம் தேதி முதல் டெல்லி மற்றும் மும்பைக்கு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் விமானங்கள் இயக்க அனுமதிக்கப்படும்.
திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி இல்லை.
இறுதிச் சடங்கில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். 50 சதவிகித இருக்கை வசதியுடன் இரவு 7 மணி வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்படும்.
மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் 50 சதவீத இருக்கை வசதிகளுடன் செயல்படும். இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கொல்கத்தாவின் பிதான் நகர், ரயில் நிலையத்தில் சமூக இடைவெளியின்றி மக்கள் கூட்டம் குவிந்தனர். கூட்ட நெரிசலால் ரயில் சேவையை 10 மணி வரை நீடித்து மேற்குவங்கம் அரசு உத்தரவிட்டுள்ளது.