கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கும்பக்கரை அருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் மிகவும் முக்கிய சுற்றுலா தலமாக கும்பக்கரை அருவி உள்ளது. இந்நிலையில் கடந்த மே மாதத்தில் இருந்து வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் வாய்க்கால் வழியாக அப்பகுதியில் உள்ள பல்வேறு கண்மாய்களுக்கு சென்றடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.