குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்துவிட்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ரவிக்கு சொந்தமான நிலத்தில் 10 அடி நீளம்முடைய மலைப்பாம்பு வாத்து ஒன்றை விழுங்கிக்கொண்டு இருந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அந்த மலை பாம்பை பிடித்துவிட்டனர். அதன்பின் மலைப்பாம்பு பிரான்மலை வனப்பகுதில் விடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.