அனுமன் ஜெயந்தி முன்னிட்டு ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சாமிக்கு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றுள்ளது.
அதன்பின் 26 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயருக்கு 1008 வடைமாலை, பூமாலை மற்றும் துளசி மாலை ஆகியவை சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்துள்ளனர்.