சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமுட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புஉள்ளது.
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
தமிழக கடலோர மாவட்டங்களின் அடுத்த 48 மணி நேரத்தில்ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமுட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 23 டிகிரி செல்சியசும் இருக்ககூடும்.