Categories
சினிமா தமிழ் சினிமா

சிக்கலில் சிக்கித்தவிக்கும் மிஷ்கினின் ‘சைக்கோ’..!!

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘சைக்கோ’ திரைப்படத்திற்கு இதுவரை தணிக்கை சான்று கிடைக்காத நிலையில், அறிவிக்கப்பட்ட தேதியில் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

துப்பறிவாளன் படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கியுள்ள படம் ‘சைக்கோ’. உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன், சிங்கம்புலி, ராம், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.யுத்தம் செய், பிசாசு, துப்பறிவாளன் பட வரிசையில் இந்தமுறை சைக்கோ திரில்லர் கதைக்களத்தில் மிஷ்கின் புதிய படைப்பை உருவாக்கியிருக்கிறார்.டபுள் மீனிங் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். தன்விர் மிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

mysskins-psycho

இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், வரும் 27ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு தயாராகி வருகிறது. ஆனால் இதுவரை படத்திற்கான தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில், படத்தின் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. மனநலம் தொடர்பான கதை என்பதால் சில காட்சிகளை நீக்கக் கோரியும், படத்தின் தலைப்பை மாற்றுமாறும் தணிக்கைக் குழு அறிவுறுத்தியதாக தெரிகிறது.

மேலும், படக்குழு இதற்கு சம்மதிக்காத நிலையில், பேச்சு வார்த்தைக்குப் பின்னர் படத்தின் தலைப்பை மாற்ற அவசியம் இல்லை என தணிக்கை குழு அனுமதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. படம் வெளியீட்டுக்கு தயாராகிவரும் நிலையில், தணிக்கை குழுவிடமிருந்து எழுத்துப்பூர்வ உறுதிக்காக சைக்கோ படக்குழு காத்திருக்கிறது

Categories

Tech |