தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பின் போது அனல் பறக்கும் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் நாங்கள் தமிழை மையமாகக் கொண்டு செயல்படும் திராவிட கட்சிள் என்று கூறிய அண்ணாமலை பாஜக அடுத்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் 150 சீட்டுக்கு ஒன்றுகூட குறையாமல் வாங்கும் என்று அதிரடியாக பேசியுள்ளார்.
மேலும் பாஜகவை அடிமட்ட அளவில் இருந்து வளர்த்தெடுத்து வருகிறோம். எனவே பாஜக 2026-ல் சட்டசபை தேர்தலில் 150 இடங்களிலும் வெற்றிவாகை சூடும் என்று உறுதிபட கூறியுள்ளார். அதேபோல் மக்களின் கருத்துக்களை எதிரொலிக்கும் கட்சியாக பாஜக திகழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.