சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றி கீழே கொட்டி அழித்துள்ளனர். இது சம்பந்தமாக அதே பகுதியில் வசிக்கும் தங்கராசு என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.