Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு…. மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

கடந்த 2019-ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவத் தொடங்கியது. பின்னர் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினார். இதனிடையே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நடப்பு கல்வி ஆண்டில் கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில் பொதுத் தேர்வின் போது சலுகை தேவைப்படும் மாற்றுத்திறனாளி தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை இயக்கம் அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பில் தெரிவித்திருந்தது என்னவென்றால் 10 ,11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தங்களுக்கு தேர்வு எழுத உதவியாளர் உள்ளிட்ட ஏதேனும் சலுகைகள் தேவைப்பட்டால் தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்கவேண்டும். நோயின் தன்மை, எந்த மாதிரியான சலுகைகள் தேவைப்படும் என்று உரிய மருத்துவ சான்றுடன் மாற்றுத்திறனாளி தேர்வர்கள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று அதை வரும் 13-ஆம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலரிடம் தலைமையாசிரியர்கள் ஒப்படைக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Categories

Tech |