கடந்த 2019-ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவத் தொடங்கியது. பின்னர் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. இந்தநிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநில அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இந்நிலையில் சமூக வலைதளமான ட்விட்டரில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ள பதிவில், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதனால் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை உடனடியாக ரத்து செய்யப்படுகிறது என்றும் மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறையே தொடரும் என்றும் கொரோனா வைரஸ் தொற்றை கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 30,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக குறைந்திருந்த பாதிப்புகள், மீண்டும் ஒமைக்ரான் காரணமாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது நாட்டு மக்களை பீதியடைய செய்துள்ளது.