நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஒமைக்ரான் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தனது பணியாளர்களின் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை ரத்து செய்துள்ளது. இனி மத்திய அரசு அலுவலகங்களில் தற்காலிகமாக அடுத்த அறிவிப்பு வரும் வரை யாரும் பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்த தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.