கொரோனா வைரஸின் வீரியம் கணிசமாக குறைந்துள்ளதாக தென்னாபிரிக்கா ஆய்வில் தெரியவந்துள்ளது. 17,200 நோயாளிகளிடம் நடந்த ஆய்வில், கடந்த 3 அலைகளில் ஏற்பட்ட பாதிப்பை விட 4 ஆம் அலையில் குறைவான பாதிப்பே ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. 4 ஆம் அலையில் மருத்துவமனை சிகிச்சை 41% பேருக்கும், வெண்டிலேட்டர் 2 சதவீதம் பேருக்கு மட்டுமே தேவைப்பட்டதாகவும், தீவிர நுரையீரல் பாதிப்பு 32%, இறப்பு 3 சதவீதமாக குறைந்ததும் தெரியவந்துள்ளது. இதன்மூலம், கொரோனாவின் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் வீரியத்தை இழந்தது என்பது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories