தைவானில் நேற்று அதிகாலையில் 20 வினாடிகள் நீடித்த மிகவும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு தைவானிலுள்ள கடற்கரை பகுதியில் நேற்று அதிகாலைப் பொழுது சுமார் 20 வினாடிகள் நீடித்த மிகவும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.
மேலும் இந்த மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் கடலோரத்தின் கிழக்கு பகுதியில் 64 கிலோமீட்டர் தொலைவினை மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.