Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓட்டி வந்த மினி பஸ்…11 கல்லூரி மாணவிகள் படுகாயம் …1மாணவி கவலைக்கிடம்…!!

மினி பேருந்து ஒன்று, சாலையில் நடந்து சென்ற கல்லூரி  மாணவிகள் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் உள்ள பழைய பாலம் ரோட்டில் , கல்லூரி மாணவிகள் கல்லூரி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.அச்சமயம்  குழித்துறை மேல்புறம் வழியாக செல்லும் ஒரு  தனியார் மினி பேருந்து , கல்லூரி சாலையில் அதிவேகமாக வந்தது. அப்போது, சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவிகள் மீதும் ரோட்டில் ஓரமாக நின்றுகொண்டிருந்த ஆட்டோ மீதும் மினி பேருந்து மோதியது.

கட்டுப்பாட்டை இழந்த மினி பேருந்து - 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயம் | Kanyakumari க்கான பட முடிவு

இவ்விபத்தில்  11 கல்லூரி மாணவிகள் காயமடைந்தனர் .காயமடைந்த மாணவிகள் எல்லோருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு மாணவி  மட்டும் இக்கட்டான நிலையில், கேரள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுதீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து போலீசார்  வழக்கு தொடர்ந்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |