உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள் என்பதால் ஏராளமான வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு தெற்கு மற்றும் ஆனைமலை ஒன்றிய அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய அதிக அளவில் வேட்பாளர்கள் வந்திருந்தனர். அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அவர்களை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சந்தித்து வாழ்த்துக் கூறினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு மக்கள் அங்கீகாரம் அளிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.