கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்த பெண் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள மணலி அண்ணா தெருவில் பவுலினா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் விமலா என்பவரது வீட்டில் மாவு அரைக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்தபோது பவுலினா திடீரென மயங்கி விழுந்துவிட்டார். இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பவுலினா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பவுலினாவின் உறவினர்கள் அவரது உடலில் காயங்கள் இருப்பதாகவும், சாவில் சந்தேகம் இருப்பதாகவும் மணலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பவுலினாவின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பவுலினா மின்சாரம் தாக்கி இறந்தாரா அல்லது மாரடைப்பினால் இறந்தாரா என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு தெரியவரும் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.