Categories
தேசிய செய்திகள்

#BREAKING: அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டாம்…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று, இன்று புதிதாக 37,379 நபர்களுக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,49,60,261ஆக அதிகரித்துள்ளது. இதனிடையில் 11,007 பேர் டிஸ்சார்ஜ் ஆனதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,43,06,414 ஆகவும், 124 பேர் இறந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,82,017 ஆகவும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்ததால் சார்பு செயலர் நிலைக்கு கீழ் உள்ள அனைத்து அரசுத்துறைகளிலும் 50 சதவீதம் பேர் சுழற்சி முறையில் பணிபுரிய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சுழற்சி முறையில் 50 விழுக்காட்டினர் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிகள், கருவுற்ற பெண் ஊழியர்கள் அலுவலகத்திற்குள் வர முற்றிலும் விலக்கு அளிக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி கொரோனா கட்டுப்பாட்டு மண்டல பகுதிகளில் வசித்து வருகின்ற அதிகாரிகள், பணியாளர்களும் அலுவலகங்களுக்கு வருவதிலிருந்து ஒன்றிய அரசு விலக்கு அளித்திருக்கிறது. இதற்கிடையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊழியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை நிறுத்தப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை உடனடியாக நிறுத்தப்படுகிறது. ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே மறு உத்தரவு வரும் வரையிலும் இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |